கடவுள் அல்லது மாபெரும் சக்தி , இது நாம் வைத்த பெயர்கள். இதை காண வேறு எங்கும் செல்ல வேண்டாம். அது நம் உடலில்தான் இருக்கிறது .
அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது ...Created By...
ngobikannan ....

Tuesday, November 16, 2010

ஹார்ட் டிஸ்க்:

ibm_harddiskநம் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் தான் அனைத்து டேட்டாக்களும் பதிவு செய்யப்படுகின்றன. இங்குதான் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரை இயக்குகிறது. ஏறத்தாழ 50 ஆண்டுகளா கத்தான் ஹார்ட் டிஸ்க் கம்ப்யூட்டரின் ஓர் இன்றியமையாத உறுப்பாக இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாடு வந்த தொடக்கத்தில் ஹார்ட் டிஸ்க் என்பதே இல்லை. இப்போது 2 டெராபைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகள் வந்துள்ளன. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை 1 ஜிபிக்கும் குறைவான அளவுள்ள ஹார்ட் டிஸ்க்குகளே புழக்கத்தில் இருந்தன.


1956


ஐ.பி.எம். நிறுவனம் தன்னுடைய RAMAC 305 என்ற சிஸ்டத்தில் மிகப் பெரிய அளவிலான கொள்ளளவுடன் கூடிய ஹார்ட் டிஸ்க்கினை இணைத்து அறிமுகப்படுத்தியது. இந்த மிகப் பெரிய கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 5 எம்.பி. அப்போது அது உண்மையிலேயே மிகப் பெரிய அளவிலான திறன் தான். ஒரு எம்பி டேட்டா கொள்ளளவிற்கு 10 ஆயிரம் டாலர் விலை எனக் குறிக்கப்பட்டது. இதன் திட அளவு இரண்டு ரெப்ரிஜிரேட்டர் அளவிற்கு இருந்தது. இதில் 24 அங்குல அளவுள்ள 50 பிளாட்டர்கள் இருந்தன.


1961


ஐ.பி.எம். ஹார்ட் டிஸ்க்கிற்கான டிரைவ் ஹெட் காற்றில் இருக்கும் வகையில் அமைத்தது.


1961


பைரண்ட் கம்ப்யூட்டர் 90 எம்பி திறனுடன் ஹார்ட் டிஸ்க்கைக் கொண்டு வந்தது. 39 அங்குல அகலத்தில் 24 டிஸ்க்குகள் கொண்டதாக இது அமைந்திருந்தது.



1963

முதல் முதலாக கம்ப்யூட்டர் சிஸ்டத்திலிருந்து வெளியே எடுக்கக் கூடிய ரிமூவபிள் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். உருவாக்கியது. இதன் திறன் 2.69 எம்.பி.; 14 அங்குல அளவில் 6 பிளாட்டர்கள் இருந்தன.


1966


புதுவிதமான ரெகார்டிங் ஹெட் கொண்ட ஹார்ட் டிஸ்க்க்னை ஐ.பி.எம். உருவாக்கியது. திறன் 29.17 எம்.பி.


1971


ட்ரேக் சர்வோ சிஸ்டம் கொண்ட முதல் ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. இது 100 எம்பி திறன் கொண்டிருந்தது.


1973


நவீன வின்ச்செஸ்டர் ஹார்ட் டிரைவினை ஐ.பி.எம். கொண்டு வந்தது. 14 அங்குல பிளாட்டர்கள் 11 இருந்தன. திறன் 100 எம்பி.


1975



ஐ.பி.எம். 62 – ரோட்டரி ஆக்சுவேட்டருடன் வந்த முதல் ஹார்ட் டிஸ்க். 5 அல்லது 9 எம்பி திறனுடன் அமைந்தது.


1976


43 எப்.டி. கிறிஸ்டல் என்னும், முதல் வளைந்து கொடுக்கக் கூடிய டிஸ்க் டிரைவ்; இரு பக்கமும் எழுதக் கூடியது. 8 அங்குல அகலத்துடன் 0.568 எம்பி கொள்ளளவு கொண்டது.


ஷுகார்ட் அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் முதல் 5.25 அங்குல அகலத்தில் ப்ளெக்ஸிபிள் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. இதில் 0.2188 எம்பி டேட்டா பதியலாம்.


1979


பியுஜிட்ஸு நிறுவனம் 10.5 அங்குல அகலத்தில் ஹார்ட் டிஸ்க் டிரைவினைத் தந்தது. ஆறு பிளாட்டர்கள் உள்ளன.


ஸீகேட் டெக்னாலஜிஸ் நிறுவனம் எஸ்.டி. 506 என்ற 5.25 அங்குல ஹார்ட் டிஸ்க்கினை 5 எம்.பி திறனுடன் கொண்டு வந்தது. இதில் 4 பிளாட்டர்கள் இருந்தன.


1980

முதல் கிகாபைட் அளவிலான ஹார்ட் டிஸ்க். ஐ.பி.எம். கொண்டு வந்த இந்த ஹார்ட் டிஸ்க் ஒரு ரெப்ரிஜிரேட்டர் அளவு இருந்தது. 250 கிலோ எடையுடன் 40 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டிருந்தது.



1981


சோனி நிறுவனமும் டிஸ்க் தயாரிப்பு பணியில் இறங்கியது. 3.5 அங்குல ப்ளெக்ஸிபில் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது.கொள்ளளவு திறன் 0.4375 எம்பி.


1983


ரோடிம் முதல் 3.5 அங்குல ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்கியது.இதில் இரண்டு பிளாட்டர்கள் இருந்தன. அளவு 10 எம்பி.


1986


அதிக திறனுடன் இயங்கும் ஸ்கஸ்ஸி ஹார்ட் டிஸ்க் டிரைவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் வெளியானது.


1988


கானர் நிறுவனம் ஒரு அங்குல உயரத்திலான 3.5 அங்குல ஹார்ட் டிரைவினைத் தயாரித்து வழங்கியது. இன்று வரை இதுதான் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் இது 31 எம்பி திறன் கொண்டதாக அமைந்தது.


1992



ஸீ கேட் நிறுவனம் அதிர்வுகளைத் தாங்கக் கூடிய முதல் 2.5 அங்குல டிஸ்க் டிரைவினைத் தயாரித்து வழங்கியது.


1993


முதல் 7200 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை (Barracuda ST12550) ஸீ கேட் தயாரித்து வழங்கியது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் பத்து அமைந்திருந்தன.


1996


மிக அதிக அளவிலான ஸ்டோரேஜ் டென்சிட்டி கொண்ட மீடியத்தினை ஐ.பி.எம். தந்தது. ஒரு சதுர அங்குல இடத்தில் நூறு கோடி பிட் டேட்டாவினை இதில் அமைக்க முடியும்.


1997


ஸீகேட் முதல் 10,000 ஆர்.பி.எம். வேக ஹார்ட் டிஸ்க் டிரைவினை வழங்கியது. முதலில் 3.5 அங்குல பிளாட்டர்களுடனும் பின் 3 அங்குல பிளாட்டர்களுடனும் அமைந் திருந்தது.


1999

மைக்ரோ டிரைவ் என அழைக்கப்படும் மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க்கினை ஐ.பி.எம். வழங்கியது. இதில் ஒரு அங்குல பிளாட்டர்கள் இருந்தன. ஒரு பிளாட்டரில் 340 எம்.பி. டேட்டா பதிய முடிந்தது.



2000

அதிவேக இயக்கத்துடன், 15000 ஆர்.பி.எம்., ஹார்ட் டிஸ்க் டிரைவினை ஸீ கேட் தயாரித்து வழங்கியது.


2002


பெர்பென்டிகுலர் மேக்னடிக் ரெகார்டிங் டெக்னாலஜி அடிப்படையில் ஹார்ட் டிஸ்க் இயங்க முடியும் என ஸீ கேட் காட்டியது. இதன் மூலம் ஒரு சதுர அங்குல சிப்பில் 100 கிகா பிட்ஸ் தகவல்களைப் பதிய முடியும்.


2005


ஹிடாச்சி முதல் 500 ஜிபி ஹார்ட் டிஸ்க்கினை வெளியிட்டது.


2006


நோட்புக் கம்ப்யூட்டர்களில் பயன்படக் கூடிய Momentus 5400.3 என்னும் 2.5 அங்குல முதல் ஹார்ட் டிரைவினை ஸீ கேட் தந்தது. இதன் கொள்ளளவு திறன் 160 ஜிபி.


Barracuda 7200.10 7200.10 என்ற பெயரில் 750 ஜிபி திறன் கொண்ட ஹார்ட் டிரைவினை ஸீ கேட் வெளியிட்டது.



2007


முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை ஹிடாச்சி நிறுவனம் டெஸ்க் ஸ்டார் 7கே 1000 என்ற பெயரில் வெளியிட்டது. இதில் 3.5 அங்குல அளவிலான பிளாட்டர்கள் ஐந்து இருந்தன. ஒவ்வொரு பிளாட்டரும் பி.எம்.ஆர். தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி 200 ஜிபி டேட்டாவினைப் பதிந்தன.


2008


லேப் டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்த ஹிடாச்சி, 2. 5 அங்குல அளவிலான ஹார்ட் டிரைவினைத் தந்தது. இதில் இரண்டு பிளாட்டர்கள் 5,400 ஆர்.பி.எம்.வேகத்தில் சுழன்றன.


2009


வெஸ்டர்ன் டிஜிட்டல் முதல் 2 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டு வந்தது. நான்கு 3.5 அங்குல பிளாட்டர்கள் இதில் உள்ளன. ஒரு பிளாட்டரில் 500 ஜிபி டேட்டா பதியமுடியும்.


வெஸ்டர்ன் டிஜிட்டல் மேலும் ஒரு சாதனையை மேற்கொண்டது. முதல் 1 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்கினை 2.5 அங்குல அகலத்தில் தயாரித்தது. லேப்டாப்பில் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக்கூடிய இதன் பெயர் ஸ்கார்ப்பியோ புளு.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More